நாட்டின் நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோரின் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1. 2019 அக்டோபர் 7-ஆம் தேதி, மலேசியாகினி செய்தி அகப்பக்கம், முஸ்லிம் அல்லாதோரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது ஹராமானது என பாஸ் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் கூறியதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அது பற்றிய குழப்பத்தைத் தெளிவுபடுத்த பாஸ் ஆதரவாளர் பேரவைக்கு கட்சித் தலைமைத்துவம் அழைப்பு விடுத்திருந்தது.
2. பாஸ் தலைவர் “இன சுயபரிசோதனைச் செய்தி” எனும் தலைப்பில், பாஸ் தலைவர் எழுதி வெளியிட்ட முழு கட்டுரையில் ஒரு பகுதியை மட்டுமே எடுத்து, தலைப்பையும் கட்டுரையின் கருத்தையும் திரித்து குறிப்பிட்டக் காரணத்துக்காக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது அம்பலமானது.
3. பாஸ் பொதுப் பேரவையில் கொள்கை உரையாற்றிய போதும், சமய ஒருமைப்பாட்டு பேரணியில் முதன்மை உரையாற்றிய போதும் கட்சித் தலைவர் வலியுறுத்திய முக்கிய அம்சத்தை இங்கு நினைவு கூரவேண்டியிருக்கிறது: நாட்டின் நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதோர் பங்கெடுக்க முடியும். நிபுணத்துவ அடிப்படையில் அமைச்சர், நிர்வாக பதவிகளில் அவர்கள் நியமிக்கப்படலாம். ஆனால், டி.ஏ.பி இப்போது நடந்துக் கொள்வதைப் போல நாட்டின் நிர்வாகத்தில் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளக் கூடாது என்பதுதான், டத்தோஸ்ரீ ஹடி அவர்களின் வலியுறுத்தல்.
4. எனவே, மக்களிடையே குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுவதை எல்லா தரப்புகளும் தவிர்க்க வேண்டும். நாட்டின் பல இன மக்களிடையே நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் கடப்பாடு அவற்றுக்கு உண்டு என்பதை பாஸ் ஆதரவாளர் பேரவை நினைவுறுத்துகிறது.
என். பாலசுப்ரமணியம்
தலைவர்,
பாஸ் ஆதரவாளர் பேரவை.
8 அக்டோபர் 2019
Kenyataan Media
Dewan Himpunan Pendukung PAS (DHPP)
PENGLIBATAN BUKAN ISLAM DALAM PEMERINTAHAN NEGARA DIBENARKAN.
1. DHPP terpanggil untuk memberikan penjelasan terhadap kekeliruan yang timbul daripada sebuah berita yang diterbitkan oleh portal Malaysiakini bertajuk, “Haram Serah Kuasa Pada Bangsa Lain Bukan Islam – Hadi”, bertarikh 7 Oktober 2019.
2. Difahamkan pihak Malaysiakini telah memetik sebahagian daripada keseluruhan artikel yang ditulis oleh Presiden PAS bertajuk “Amanat Muhasabah Bangsa”, dengan mengubah tajuk asal penulisan beliau dengan tujuan yang tertentu.
3. Perlu difahami bahawa Presiden PAS telah mengulangi penegasan beliau di dalam Ucapan Dasar Muktamar PAS dan Ucaptama Himpunan Penyatuan Ummah (HPU) bahawa: Masyarakat bukan Islam boleh dilibatkan dalam pemerintahan negara, malah boleh memegang jawatan Menteri dalam bidang eksekutif mengikut kepakaran, namun tidak boleh pemerintahan negara dikuasai atau didominasi oleh kalangan bukan Islam, seperti sikap yang ditunjukkan oleh DAP pada hari ini.
4. Justeru DHPP menyeru semua pihak agar berhati-hati dengan sebarang pemberitaan yang boleh menimbulkan kekeliruan dan perpecahan, demi memastikan keharmonian masyarakat majmuk dalam negara ini terpelihara.
N. BALASUBRAMANIAM
Ketua Dewan Himpunan Pendukung PAS (DHPP)
Bertarikh: 8 Oktober 2019